பெரம்பூர்: பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக போட்டியிடும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தினமும் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு மக்கள் ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி கண்ணதாசன் நகர், அபிராமி அவென்யூ, முத்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், ‘பெரம்பூர் தொகுதியில் முதல்வரின் பிரசாரத்திற்கு பிறகு எனது வெற்றி பிரகாசமாக உள்ளது. நிச்சயமாக சட்டமன்ற உறுப்பினராவேன். இந்த தொகுதி மக்களுக்காக உழைப்பேன்.
பெரம்பூர் தொகுதியில் அடித்தட்டு மக்கள் அதிகம் வாழ்கின்றனர். அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவேன்.