தாம்பரம்: பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தொகுதி முழுவதும் மக்களை நேரில் சென்று சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, அனகாபுத்தூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் அங்கு வேஷ்டி, லுங்கி தறி நெய்யும் இடத்திற்கு சென்று, நெசவாளர்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது நெசவாளர்களின் பணியை அறிந்துகொள்ளும் வகையில் வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தறி நெசவு செய்தார். பின்னர் நெசவாளர்களிடம் அவர் பேசுகையில், ‘அதிமுக அரசு நெசவாளர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகளை செய்துள்ளது. மீண்டும் பல்வேறு திட்டங்கள் நெசவாளர்களுக்கு கிடைத்திட அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
