மக்கள் பிரச்னையை உடனே தீர்ப்பேன்: மயிலை த.வேலு பிரசாரம்

சென்னை: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த.வேலு நேற்று மந்தைவெளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களான மகளிருக்கு மாதம் ரூ.1000, கொரோனா நிவாரணம் ரூ.4000, சிலிண்டருக்கு ரூ.100 மானியம், சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ.10 ஆயிரம் அரசு மானியம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் அவரை உற்சாக வரவேற்று மலர்தூவி, சால்வை அணிவித்து, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வாழ்த்தினர். தொடர்ந்து வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரம் செய்தார். அப்போது பொதுமக்கள் அவருக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, ஆரத்தி எடுத்து வாழ்த்தினர்.  

மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எங்களுடைய வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கே, திமுக வெற்றி பெறும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து அவர் உங்களுடைய பிரச்னையை உடனுக்குடன் தீர்ப்பதே என்னுடைய முதல் பணியாக இருக்கும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள நலத்திட்டங்களை தொகுதி மக்கள் அனைவருக்கும் பெற்று கொடுப்பேன். அது என்னுடைய கடமை, பணியாகும். தொகுதியில் ஏதாவது குறைகள் இருப்பின் அவற்றை உடனே தீர்ப்பேன். உங்களுக்கு எந்த பிரச்னையாக இருந்தாலும் உடனுக்குடன் நிறைவேற்றி கொடுப்பதை என்னுடைய முதல் பணியாக இருக்கும்,’ என்றார்.

Related Stories: