மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களா?: கமல்ஹாசன் மீது நடிகை கவுதமி தாக்கு

சென்னை: தமிழ் திரையுலக முன்னணி நடிகை கவுதமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜவில் இணைந்தார். அவர் பாஜ மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நடிகை கவுதமி அளித்த பேட்டி: கமல்ஹாசனை பிரிந்து பல ஆண்டுகள் கடந்து விட்டது. அது முடிந்து போன பிரச்னை.

மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை கொண்டு வருவோம் என்கிறார்கள். அந்த மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்களா? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் புதிய கட்சி தொடங்கும் போது இதுபோன்ற மாற்றங்களை கொண்டு வருவோம் என கூறுவது வழக்கம். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இதுபோன்ற மார்க்கெட்டிங் தந்திரத்தை கடைபிடிக்கிறது.

Related Stories: