மத்திய அரசு அதிமுகவுக்கு ஆதரவாகவும், தமிழக மக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது: மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்

சென்னை: மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் சென்னையில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார கூட்டத்தில் பேசிய பிரகாஷ் காரத், எடப்பாடி பழனிசாமி அரசு சுதந்திரமான அரசாக இல்லாமல் அடிமை அரசாக உள்ளது. இந்த அரசின் கட்டுப்பாடு நரேந்திரமோடி மற்றும் அமித்ஷாவின் கைகளில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: