பிரதமர் மோடி வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொண்டது தேர்தலை நடத்தை விதிமுறையின் மீறல்: மம்தா பானர்ஜி குற்றசாட்டு..!

கொல்கத்தா: பிரதமர் மோடி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 30 தொகுதிகளுக்கு நேற்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் கராக்பூரில் நடைபெற்ற பேரணியில் மம்தா பானர்ஜி பேசியபோது, பிரதமர் மோடியின் வங்கதேச சுற்றுப்பயணம் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று குற்றம் சாட்டினார்.

இது குறித்து அவர் பேசுகையில், “நான் வங்கதேசத்திலிருந்து மக்களை அழைத்து வந்து ஊடுருவல்களை ஊக்குவித்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். ஆனால் வாக்கு சேகரிப்பதற்காக மோடி வங்கதேசம் சென்றுள்ளார். மேற்கு வங்கத்தில் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. மோடி வங்கதேசத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளை கவர்வதற்காக மேற்கு வங்கம் சென்று பேசிக்கொண்டிருக்கிறார். இது தேர்தலை நடத்தை விதிமுறையின் ஒட்டுமொத்த மீறல்” என்று தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி, வங்கதேசத்தின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மத்துவா சமூகத்தின் ஆன்மீக குரு ஹரிசந்த் தாக்கூர் பிறந்த இடத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். மேற்கு வங்க மாநிலத்தில் மத்துவா சமூக மக்கள் அதிக அளவில் வசிப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர்களின் வாக்குகளை கவர்வதற்காக பிரதமர் மோடி வங்கதேசம் சென்றுள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: