அரசு மருத்துவமனை இல்லாத தொகுதி: அம்பத்தூர் ஆர்.ஜே.சந்தோஷ் (பேட்டரி விற்பனையாளர்)

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி என்பது தொழிற்சாலை நிறைந்த பகுதியாகும். இங்கு பல ஆண்டுகளாக அரசு பொது மருத்துவமனைகள் இல்லை. மேலும், ஆக்கிரமிப்புகளால் சி.டி.எச் சாலை குறுகி போய் உள்ளது. இதனால், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக, உயிர் சேதமும் பொருட்சேதமும் ஏற்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாக இப்பகுதியில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளது. ஆனால், அதிமுக எம்எல்ஏவாக இருந்தும் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் கொடுத்து சென்று சேர வேண்டிய அவலநிலை உள்ளது. மேலும், இந்த தொகுதி முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். அங்கு தொழிலாளர்கள் சென்று வர மினி பேருந்து இயக்க வேண்டும்.

Related Stories: