போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கிய பாஜவினர் கட்சியில் இருந்து நீக்கம்: எல்.முருகன் நடவடிக்கை

சென்னை: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுக சார்பில் அமைச்சர் தங்கமணி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நாமக்கல் மாவட்ட பாஜ செயலாளர் ஓம் சரவணா போட்டி வேட்பாளராக களத்தில் இறங்கியுள்ளார். அவரை போட்டியில் இருந்து வாபஸ் பெறும்படி கட்சித் தலைமை வற்புறுத்தியது. அமைச்சரும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர் போட்டியில் இருந்து வாபஸ் வாங்கவில்லை. இதனால் ஓம்சரவணாவை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி மாநில தலைவர் எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக சார்பில் செ.தாமோதரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சுயேட்சையாக கோவை ஓபிசி அணியின் மாவட்ட தலைவர் தர்மலிங்கம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதனால், அவரையும் கட்சியில் இருந்து எல்.முருகன் நீக்கியுள்ளார். அதேபோல, நீலகிரி மாவட்டம் ஊட்டி தொகுதியில் பாஜ வேட்பாளராக போஜராஜன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடும் நீலகிரி மாவட்ட பாஜக துணை தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியும் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Related Stories: