திருப்பத்தூர் அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்பு கோழிகள் உயிருடன் எரிந்து சாம்பல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த சின்னகந்திலி கிரமாம் கொட்டகொள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாது (47),  இவர் கடந்த 8 வருடமாக கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவரது கோழி பண்ணையில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் என சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான கோழிகளை வளர்த்து வந்தார். இந்நிலையில்  இவரது கோழி பண்ணையில் நேற்று மாலை 4 மணியளவில் திடீர் என கோழிப்பண்ணை தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாது தீயை அணைக்க முயற்சி செய்தார். திடீரென கோழி மற்றும் கோழிக்குஞ்சுகள் உள்ள பகுதியிலும் தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியது.

இதுகுறித்து தகவலறிந்த  திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். அதற்குள் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான கோழிக்குஞ்சுகள் எரிந்து நாசமாயின. சம்பவம் குறித்து கந்திலி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு கோழிகள் இறந்ததா? அல்லது சமூகவிரோதிகள் எவரேனும் கோழிப்பண்ணைக்கு தீவைத்தனரா உள்ளிட்ட பல்வேறு  என்ற வண்ணம் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து மாது கூறுகையில், `அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி இந்த கோழி பண்ணையை வைத்தேன். இந்த கோழி பண்ணையை வைத்துதான் எனது வாழ்வாதாரம் இருந்தது. எனவே அரசு எனக்கு உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

Related Stories: