கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை ஆதரித்து மு.க.தமிழரசு பிரசாரம்

பெரம்பூர்: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சூறாவளி சுற்றுப்பயணம் ெசல்வதால், அவரை ஆதரித்து அவரது குடும்பத்தினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கொளத்தூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று காலை மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக அவரது தம்பி மு.க.தமிழரசு, கொளத்தூர் தொகுதியில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தார். 67வது வட்டத்தில் உள்ள கண்ணபிரான் கோயில் தெரு, ஜெகநாதன் தெரு, வாஞ்சிநாதன் தெரு, செங்கல்வராயன் தெரு, சிவகாமி தெரு, துலுக்காத்தம்மன் கோயில் தெரு, மூர்த்தி தெரு, ரங்கராய் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: