கோவளம் துறைமுகத் திட்டம் தொடர்பாக போலி கடிதம் வெளியீடு: அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் மீது ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி புகார்

நாகர்கோவில்: குமரி மாவட்டம், கோவளம் துறைமுகத் திட்டம் தொடர்பாக போலி கடிதம் வெளியிட்டதாக அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் மீது புகார் எழுந்துள்ளது. தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகம் எழுதியது போல் தளவாய் சுந்தரம் போலி கடிதத்தை வெளியிட்டதாக அதிமுக வேட்பாளர் மீது ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் குற்றம் சாட்டியுள்ளார். குளச்சல் மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும் என்பதுதான் மீனவமக்களின் கோரிக்கை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனோ இணையத்தில் சரக்கு பெட்டக மாற்றுத் துறைமுகம் அமைக்கப்படும் என்று 2015-ல் அறிவித்திருந்தார். ஊர் மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து 2017-ல் இணையம்  சரக்கு பெட்டக மாற்றுத் துறைமுகத் திட்டம் கைவிடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் அருகே  சரக்கு பெட்டக மாற்றுத் துறைமுகம் அமைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்க்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

இதன் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் மீண்டும் கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி துறைமுகம் சார்பில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் அருகே  சரக்கு பெட்டக மாற்றுத் துறைமுகம் அமைப்பதற்கு யாராவது முன்வந்தால் விண்ணப்பிக்கலாம் என்று வெளியிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் மீண்டும்  சரக்கு பெட்டக மாற்றுத் துறைமுகம் அமைப்பதற்கான நடவடிக்கையை மத்தியஅரசு மேற்கொள்வது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து  அந்த பகுதியில் சரக்கு பெட்டக மாற்றுத் துறைமுகம் அமைக்கக்கூடாது என்று அப்பகுதி மக்களும் மீனவர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர்கள் இது தொடர்பாக சில ஆர்ப்பாட்டங்களும் நடத்தியுள்ளார். இந்நிலையில் வருகின்ற 27-ம் தேதி மிகப்பெரிய அளவில் அங்கு போராட்டம் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் கன்னியாகுமரி சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருக்கின்ற நிலையில்  சரக்கு பெட்டக மாற்றுத் துறைமுகம் ஆளும் அதிமுக அரசுக்கும், மத்தியில் உள்ள பாஜக அரசுக்கு எதிரான ஒரு நிலையை உருவாக்கும் என்று கருகப்படுகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கன்னியாகுமரி ஆட்சியருக்கு அனுப்பியதாக ஒரு கடிதத்தை வெளியிட்டிருந்தார்.

அந்த கடிதத்தில் துறைமுகம் அமைப்பதற்கான ஒப்பந்த விளம்பரத்தை ரத்து செய்யப்பட்டிருப்பதாக கடிதத்தை வெளியீட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். ஆனால் இந்த கடிதம் உண்மையான கடிதம் இல்லை என துறைமுக போராட்ட குழுவை சேர்ந்தவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான தேவசகாயம் குற்றம் சாட்டியுள்ளார். நாகர்கோவிலில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பெட்டியில் இந்த கடிதம் போலியானதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடைபெறக்கூடிய நேரத்தில் இந்த கடிதம் எப்படி வெளியிடப்பட்டது, மாவட்ட ஆட்சித்தலைவர்க்கு எழுதப்பட்ட இந்த கடிதம் எப்படி தளவாய் சுந்தரத்தின் கைக்கு சென்றது, இது தவிர இந்த போராட்ட குழு தலைவர் பிரபா என்பவரிடம் காவல் உதவி ஆய்வாளர் மோகன் என்பவர் தொலைபேசியில் அழைத்து இது போன்ற கடிதம் எங்களிடம் உள்ளது, அதனை வருக்கு அனுப்புவதாக கூறியுள்ளார். இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்த கடிதம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என தேவசகாயம் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: