என்.ஆர்.தனபாலனை ஆதரித்து ஜி.கே.வாசன் தேர்தல் பிரசாரம்

பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக பெருந்தலைவர் மக்கள் கட்சி  தலைவர் என்.ஆர்.தனபாலன் போட்டியிடுகிறார். இவர், தினசரி பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், என்.ஆர்.தனபாலனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவிலிருந்து மகாகவி பாரதி நகர் முல்லை நகர்  வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவார். தமிழக முதல்வரும், துணை முதல்வரும் சாமணியர்களாக இருந்து மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும்  கொடுத்து மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி வருகின்றனர். இந்த தொகுதியில் மகளிர் அதிகம் உள்ளனர்.

அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு அதிக திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. காமராஜர் பெயரில் கட்சி வைத்திருக்கிற காரணத்தாலேயே என்.ஆர்.தனபாலன் சட்டமன்ற உறுப்பினராக வர வேண்டும். உங்கள் தொகுதியில் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய, வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள என்.ஆர்.தனபாலனை  வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார். வாக்கு சேகரிப்பின்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Related Stories: