இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை

புதுடெல்லி: தெற்காசிய நாடுகளில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் செய்து வரும் அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின், நேற்று முன்தினம் இந்தியா வந்தார்.  பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்  தோவலை அவர் சந்தித்து பேசினார். நேற்று அவர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர், இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, ராஜ்நாத் சிங் கூறுகையில், ``மிகவும்  ஆக்கப்பூர்வமான, பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருதரப்பு பாதுகாப்பு உறவை பலப்படுத்துவது, தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை முழு வீச்சில் அமல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும்,  தீவிரவாதத்தை ஒடுக்குதல், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவது பற்றியும் பேசப்பட்டது,’’ என்றார்.  ஆஸ்டின் கூறுகையில், ``இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் மைய தூணாக விளங்கும் இந்தியாவுக்கு ஆக்கப்பூர்வமான, சிறந்த ஒத்துழைப்பு வழங்கப்படும்,’’ என்றார்.

Related Stories: