திருவிக நகரில் தீராத கழிவு நீர் பிரச்சனை: புளியந்தோப்பு என்.கே.குணசுந்தர்

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் மிகவும் பாவப்பட்ட மக்கள் வாழும் தொகுதி திருவிநகர் தொகுதி என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு அடிப்படை வசதிகள் இல்லாத தொகுதி என்றால் அது திருவிக நகர் தொகுதிக்கு பொருந்தும். சிறு  மழைக்கே கழிவுநீர் வீடுகளில் புகுந்து கடும் துர்நாற்றம் வீசும் நிலை தான் உள்ளது. எப்போதும் புளியந்தோப்பு பகுதியில் ஏதாவது ஒரு சாலையில் கழிவுநீர் தெருக்களில் தேங்கி இருப்பதை பார்க்கலாம். மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப பாதாள  சாக்கடை வசதியை அதிகாரிகள் விரிவுப்படுத்தாதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு சட்டமன்ற தேர்தல் வரும்போதும் திருவிக நகர் தொகுதியில் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பேன் என்று கூறி வரும் வேட்பாளர்கள் அதன் பின்பு கழிவுநீர் பிரச்னைக்கு எந்த ஒரு நிரந்தர தீர்வும் இதுவரை காண முடியாத  நிலை தான் உள்ளது.

திமுக எம்எல்ஏ என்ற ஒரே காரணத்திற்காக இந்த தொகுதியின் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளாமல் இந்த அரசு கைவிட்டது. போட்டியிடும் வேட்பாளர்கள் பாதாள சாக்கடை பிரச்னைக்கு எந்த மாதிரியான நிரந்தர தீர்வைத் தர திட்டம் வைத்துள்ளார்கள் என்பதை சிந்தித்து மக்கள் வாக்களிப்பார்கள்.

Related Stories: