யமுனையில் உள்ள 80 சதவீத தொழிற்சாலைகள் ஓசிஇஎம்எஸ் நிறுவவில்லை

புதுடெல்லி: யமுனை ஆற்றுப்படுகையில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பல்வேறு தொழிற்சாலைகள் புகையை வெளியிடுவதோடு, தொழிற்சாலை கழிவுகளையும் யமுனையில் வெளியறே–்றி வருகின்றன. இதுபோன்று யமுனை ஆற்றுப்படுகையை மாசுபடுத்தி வரும் 1,631 தொழிற்சாலைகளில் 285 மட்டுமே கழிவுகள் வெளியேற்றம் மற்றும் காற்றுமாசு வெளியேற்றத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஓசிஇஎம்எஸ் முறை நிறுவியுள்ளன.  அரியானாவில் 661, உபியில் 419, டெல்லியில் 265 மற்றும் உத்ராகண்டில் ஒன்று என செயல்பட்ட வருகின்றனர். இந்த தொழிற்சாலைகள் ஓசிஇஎம்எஸ் நிறுவி அவற்றை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கழிவுநீர் கால்வாய் உடன் இணைக்கப்பட வேண்டும்.

ஆனால், மொத்தம் 1,346 தொழிற்சாலைகள் ஒசிஇஎம்எஸ் இதுவரை நிறுவவில்லை. இந்நிலையில், சம்மந்தப்பட்ட மாநிலஙகளில் உள்ள நிறுவனங்கள் இந்த ஓசிஇஎம்எஸ்-ஐ மூன்று  மாதங்களுக்குள் நிறுவி அவற்றை கால்வாயுடன் இணைத்து இதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: