விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து துயர் துடைக்கும் அரசு அதிமுக அரசு : திருத்துறைப்பூண்டியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

திருத்துறைப்பூண்டி : காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என்று திருத்துறைப்பூண்டியில் இன்று நடந்த பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் சுரேஷ் குமாரை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திருத்துறைப்பூண்டி காமராஜ் சிலை அருகில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து துயர் துடைக்கும் அரசு அதிமுக அரசு. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று, அவர்களது வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நகை கடன், மகளிர் சுய உதவிக்குழுவினரின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரி- கோதாவரி இணைப்பு திட்டம் அதிமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும். அதிமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடே இல்லை. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால், முத்துப்பேட்டை தனி தாலுகா ஆக்கப்படும். மணலி கந்தசாமிக்கு மணி மண்டபம் கட்டித்தரப்படும்.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கியது அதிமுக தான்.பல வருடங்களாக நீடித்த காவிரி பிரச்னைக்கு தீர்வு கண்டது அதிமுக அரசு தான். சிறப்பாக செயல்படும் அதிமுக அரசால், புதிய தொழில்கள் தமிழ்நாட்டிற்கு வருவதுடன் வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.இங்கு அதிமுக வெற்றி பெற்றால், எம்எல்ஏ வந்து என்னை அடிக்கடி சந்தித்து, உங்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி தருவார். எதிர்க்கட்சி உறுப்பினர் வெற்றி பெற்றால், பெயரளவுக்கு தான் செயல்படுவார்கள். எனவே அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள்,இவ்வாறு முதல்வர் பேசினார்.

Related Stories: