தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.34 ஆயிரத்தை தாண்டியது: சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71.60-க்கு விற்பனை..!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.34 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.  

இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காகக் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தினமும் கணிசமான உயர்வை சந்தித்து வருகிறது. இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தக முடிவில் சென்னை, மதுரை, கோவை ஆகிய பகுதிகளில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.33,896-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,237-க்கு விற்பனை ஆகிறது.  சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனையடுத்து, இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ரூ.34,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,258-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.72.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: