அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு உதவ புடின் உத்தரவிட்டார்: உளவுத்துறை குற்றச்சாட்டு

வாஷிங்டன்: கடந்தாண்டு நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதில், குடியரசு  கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். இந்நிலையில், இந்த தேர்தலில் டிரம்புக்கு சாதகமாக தேர்தல் முடிவுகளை கொண்டு வர  உதவும்படி தனது நாட்டு உளவுத்துறைக்கு ரஷ்ய அதிபர் புடின் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளது. இது பற்றி அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் அலுவலகம் வெளியிட்ட 15 பக்க அறிக்கையில், ‘அதிபர் தேர்தலில் டிரம்புக்கு உதவும் வகையில்,  அவருக்கு சாதகமான முடிவுகளை கொண்டு வருதற்காக தேர்தல் விவகாரங்களில்  புடின் தலையிட்டார். தனது நாட்டு உளவுத்துறைக்கு ஒப்புதல்  அளித்தார்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: