ஏப்ரல் மாத இறுதியில் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியா வருகிறார். கடந்த ஜனவரி 26ம் தேதி டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். அந்த நேரத்தில் தனது நாட்டில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவியதால், அவர் தனது பயணத்தை ரத்து செய்தார். இந்நிலையில், அடுத்த மாதம் இறுதியில் அவர் இந்தியா வருவதாக. அவருடைய அலுவலகம் நேற்ற அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகிய பின்னர், போரிஸ் மேற்கொள்ள இருக்கும் முதல் சர்வதேச சுற்றுப்பயணம் இதுவாகும்.

மேலும், ஆசிய பொருளாதார கூட்டமைப்பில் உறுப்பினராவதற்காக இங்கிலாந்து விண்ணப்பித்துள்ள நிலையில், போரிஸ் ஜான்சன் இந்த இந்திய பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த கூட்டமைப்பில் இந்தியா முக்கிய உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பயணத்தின்போது இருநாட்டுக்கும் இடையே வர்த்தகம், வேலை வாய்ப்பு, பல்வேறு துறைகளில் முதலீடு உள்ளிட்டவை குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - இங்கிலாந்து மேம்பட்ட வர்த்தக கூட்டாண்மை குறித்தும் இந்த பயணத்தின்போது இருநாட்டு தலைவர்களும் உறுதி செய்வார்கள் என தெரிகிறது.

Related Stories: