சாத்தூர் சிட்டிங் எம்எல்ஏ குறித்து ‘‘பகீர்’’ புகார் 46 ஓட்டுல ஜெயிச்சுருப்பாரு...446 ஓட்டுல ஜெயிக்க வச்சேன்...அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சால் சலசலப்பு

சாத்தூர்:  விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்து பேசியதாவது: இந்த தொகுதியில் அமமுக சார்பில் ராஜவர்மன் போட்டியிடுகிறார். இவர், சாத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது, 46 ஒட்டில் வெற்றி பெற வேண்டியவரை, 446  ஒட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து எம்எல்ஏ ஆக்கினேன். ஆனால், மூன்றே மாதத்தில் அமைச்சர் ஆசையில் முதல்வரிடம் சென்றார். பின்னர் மாவட்ட செயலாளர் பதவி வேண்டும் என்றார். நல்லவேளை முதல்வர் கொடுக்கவில்லை. என்னை ஏன் சிவகாசியில்  வேட்பாளராக நிற்கவில்லை என அமமுக வேட்பாளர் ராஜவர்மன் கேட்கிறார். விருதுநகர் மாவட்டத்தில் ரிசர்வ் தொகுதி தவிர அனைத்து தொகுதியிலும் நின்று வெற்றி பெறுவேன். சாத்தூர் தொகுதியில் அமமுக வேட்பாளர் ராஜவர்மன் டெபாசிட் இழப்பார். எங்கள் கூட்டணி ஆன்மிக கூட்டணி. முதல்வர் அறிவித்த தேர்தல்  வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரதமர் மோடி உதவுவார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: