ஏடிபி ஒற்றையர் தரவரிசை 2வது இடத்தில் மெட்வதேவ்

பாரிஸ்: ஏடிபி ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் ரஷ்ய வீரர் டானில் மெட்வதேவ் ஒரு இடம் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார். மார்ஷெல் ஓபன் 13 தொடரின் பைனலில் பியரி ஹெர்பர்ட்டுடன் (பிரான்ஸ்) நேற்று முன்தினம்  மோதிய மெட்வதேவ் 6-4, 6-7 (4-7), 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது அவரது 10வது ஏடிபி பட்டமாகும். இந்நிலையில், நேற்று வெளியான ஏடிபி தரவரிசையில் ஸ்பெயின் நட்சத்திரம்  ரபேல் நடாலை பின்னுக்குத் தள்ளி மெட்வதேவ் 2வது இடத்தை பிடித்தார். செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் 6வது இடத்தை தக்கவைத்துள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் டாப் 10

ரேங்க்    வீரர்                புள்ளி

1    நோவாக் ஜோகோவிச் (செர்பியா)        12,008

2    டானில் மெட்வதேவ் (ரஷ்யா)        9,940

3    ரபேல் நடால் (ஸ்பெயின்)        9,670

4    டொமினிக் தீம் (ஆஸ்திரியா)        8,625

5    ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்)    6,765

6    ரோஜர் பெடரர் (சுவிஸ்)        6,375

7    அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி)    5,635

8    ஆந்த்ரே ருப்லேவ்    (ரஷ்யா)

9    டீகோ ஸ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா)    3,640

10    மேட்டியோ பெரட்டினி (இத்தாலி)        3,453

Related Stories: