மகாராஷ்டிராவில் கடும் கட்டுப்பாடு அமல்

நாக்பூர்: மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், நாக்பூர், அவுரங்காபாத் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் நாக்பூர் மாவட்டத்தில் நேற்று முதல்  ஒருவார கால முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. வருகிற 21ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். சாலைகளில் தேவையின்றி பொதுமக்கள் நடமாடக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மாவட்டம் முழுவதும் 99  சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நகர எல்லையில் 8 சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர 99 நடமாடும் ரோந்து வாகனங்கள், 2 கம்பெனி மாநில ரிசர்வ் போலீசார், கலவரத்தை கட்டுப்படுத்தும் போலீசார்,  காவல்படையை சேர்ந்த 500 பேர், ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மகாராஷ்டிரா முழுவதிலும் மத, அரசியல் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளன.

Related Stories: