தேமுதிக - அமமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழக அரசியலில் சரித்திரம் படைக்கும் : பிரேமலதா விஜயகாந்த் உறுதி

சென்னை : ஜெயலலிதாவுக்கு இருந்த பக்குவம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிக - அமமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழக அரசியலில் சரித்திரம் படைக்கும். ஜெயலலிதாவுக்கு இருந்த பக்குவம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. பக்குவமில்லாத முதல்வராக செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஏதோ நாங்கள் தொகுதிகளை கேட்டு கெஞ்சுகிறோம் என்றெல்லாம் சிலர் விமர்சித்தனர்.நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணிக்கு செல்லவில்லை.பாஜக வழியாக அதிமுக தான் எங்களுடன் கூட்டணி பேச்சுக்கு வந்தது. கூட்டணி பேச்சுவார்த்தையை டிசம்பர் மாதத்திலேயே தொடங்க அதிமுகவுக்கு கோரிக்கை வைத்தோம்.

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்க காலதாமதம் ஆகியது.தேமுதிகவை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் தான் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது. அதிமுக கூட்டணியில் சுமூகமாக செல்ல வேண்டும் என்பதால் மிகமிக பொறுமையாக, பக்குவமாக இருந்தோம்.கனத்த இதயத்துடன்தான் நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது.தேமுதிகவிற்கு 13 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க முடியாது என அதிமுக பிடிவாதமாக கூறியது; இறுதியாக 18 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கேட்டோம். விரும்பும் முடிவை எடுத்துக் கொள்ளுங்கள் என்று எடப்பாடி கூறியதால் கூட்டணியில் இருந்து வெளியேறினோம்,பொய் புகாரை சுமத்தி கூட்டணியில் இருந்து எங்களை அதிமுக வெளியேற்றிவிட்டது. எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன் தான் என்றார்.

Related Stories: