கீழக்கரை கடற்கரையோரம் பூங்கா அமைக்க வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல்

கீழக்கரை : கீழக்கரை நகராட்சியில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். சிறுவர்கள், சிறுமிகள், பெரியவர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் பயன்படும் வகையில் அரசு சார்பில் பூங்கா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய ஜட்டி பாலம் அமைக்கப்பட்ட பிறகு மின் துறைக்கு சொந்தமான இடம் சுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாலை நேரத்தில் கடலை ரசிக்க ஏராளமான மக்கள் திரண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கீழக்கரை கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிட அரசு துறையின் உரிய ஒப்புதல் அளிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இதனால் முன்பைவிட மக்கள் அதிகளவு கூடுகின்றனர். ஆனால் அவர்கள் அமர்வதற்கு இருக்கை இல்லாத காரணத்தால் பாதுகாப்பற்ற நிலையில் ஜெட்டி கடல் பாலத்தில் மக்கள் அதிகளவில் ஆபத்தை உணராமல் அமர்ந்து வருகின்றனர்.

இதனால் பாலம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் காலி இடம் உள்ளது. அந்த இடத்தை கையகப்படுத்தி சிறுவர்களுக்கான பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. சமூக நல அமைப்புகளும் இதுபற்றி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Stories: