நச்சுனு 4 கேள்வி... திமுக வெற்றிக்கு தேர்தல் அறிக்கை உறுதுணையாக இருக்கும்: திமுக எம்.எல்.ஏ தா.மோ.அன்பரசன்: திமுக தேர்தல் அறிக்கை குறித்த உங்கள் கருத்து?

2006ல் கலைஞர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்று கூறினார்கள். அப்போது திமுக ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்கு அந்த தேர்தல் அறிக்கை ஒரு காரணமாக இருந்தது. இதேபோல், இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இந்த தேர்தல் அறிக்கை உறுதுணையாக இருக்கப்போகிறது.  

2தேர்தல் அறிக்கை எதை பிரதிபலிக்கிறது?

அடித்தட்டு மக்களின் பிரச்னைகளை அறிந்து அந்த மக்களின் வாழ்வை வளப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது தான் இந்த தேர்தல் அறிக்கை. ஏழ்மை நிலையில் உள்ள மக்களும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற கூடிய அளவிற்கு சிந்தித்து போடப்பட்ட தேர்தல் அறிக்கை இது.

3பெண்களிடம் வரவேற்பு எப்படி உள்ளது?

பெண்களுக்கு இந்த தேர்தல் அறிக்கையில் ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளார்கள். மின்சார கட்டணம் மாதம், மாதம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இதனால், நிச்சயமாக பல குடும்பங்கள் பயன்படும். திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் ரூ.1000 தருவோம் என்று கூறியதை மக்கள் வரவேற்றார்கள். ஆனால், அதன்பிறகு அதிமுக ரூ.1,500 தருவோம் என்று கூறியது எடுபடவில்லை. கேஸ் மானியம் 100 ரூபாய் கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இப்படி ஏராளமான திட்டங்கள் பெண்களுக்காக போடப்பட்டுள்ளது.

4பிரசாரத்திற்கு செல்லும் உங்களுக்கு மக்களிடம் வரவேற்பு எவ்வாறு இருக்கிறது?

தலைவருடன் இப்போது தான் ஒரு சுற்று பிரசாரம் சென்று வந்தேன். தேர்தல் அறிக்கை வெளியீட்டிற்கு பிறகு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. எதிராளிகளின் திட்டம் எடுபடாது. இன்னும் 2 நாள் சென்றால் போதும் ஒருமிகப்பெரிய ஆதரவு அலை வீசும்.

Related Stories: