பூத் ஏஜென்டாக தேர்வு செய்யாததற்கு எதிர்ப்பு ஜெயலலிதா கோயிலில் அதிமுக தொண்டர் தீக்குளிப்பு: மதுரை அருகே பரபரப்பு

பேரையூர்:  ஜெயலலிதா கோயிலில் அதிமுக தொண்டர் தீக்குளித்த சம்பவம் மதுரை அருகே  பரபரப்பை ஏற்படுத்தியது.மதுரை மாவட்டம், டி.குன்னத்தூர் அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோயில் உள்ளது. பேரையூர் அருகே சந்தையூரை சேர்ந்தவர் பழனிச்சாமி(50). அதிமுகவின் தீவிர தொண்டர். சந்தையூரில் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவராகவும், ஊராட்சி வார்டு உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் நேற்று மாலை ஜெயலலிதா கோயிலுக்கு வந்தார். திடீரென தனது உடலில் மண்ணெண்

ெணய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீப்பற்றி எரிந்த நிலையில் ஓடி வந்த பழனிச்சாமியை பார்த்து அப்பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர், உடனே தீயை அணைத்து மீட்டனர்.

இது குறித்து பழனிச்சாமியை கூறும்போது, ‘‘வரும் சட்டமன்ற தேர்தலுக்கு சந்தையூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு பூத் ஏஜென்ட் தேர்வு செய்துள்ளனர். அதில் புதிய அதிமுக நிர்வாகிகள் எனது பெயரை நீக்கி விட்டனர். இதனைக் கண்டித்துதான் தற்கொலைக்கு முயன்றேன். அதிமுக தோன்றிய காலம் முதல் நான் கட்சிக்காக பாடுபட்டவன். எனக்கு என்ன மரியாதை இருக்கிறது? இனிமேல் வாழ்ந்து என்ன பயன்’’ என கண்ணீருடன் தெரிவித்தார். படுகாயமடைந்த பழனிச்சாமியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து  விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் திறப்பு விழா நடந்த ஜெயலலிதா கோயிலில், அதிமுக தொண்டரே தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: