குடும்பத்தினர் சிறைக்கு சென்றதால் ஆத்திரம் :நிகாங் சீக்கிய மததலைவரை கொல்ல முயன்ற 2 பேர் கைது

புதுடெல்லி: பஞ்சாபில் உள்ள நிகாங் சீக்கி ஜாதேபாண்டியின் தலைவரை கொலை செய்ய திட்டமிருந்த தாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து போலீசார் நடத்திய சோதனையின் மல்கித் சிங்(27) மற்றும் புபேந்தர் சிங்(24) ஆகிய இருவரை டெல்லி ஷாலிமார்பாக் அருகே மடக்கி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 20 தோட்டாக்கள் கைபற்றப்பட்டன. இவர்களிடம் நடத்திய விசாரணை குறித்து துணை கமிஷனர் சஞ்சீவ் குமார் கூறியதாவது: கைது செய்யப்பட்ட மல்கித் தந்தை பல்தேவ் சிங், ஆசாத்பூரில் உள்ள குருத்வாரா ஜெய்மல் சிங்கின்  ”கிராந்தி” ஆக நியமிக்கப்பட்டார். இதற்கிடையில் கடந்த 2007ம் ஆண்டு பாட்டியாவாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நிகாங் சீக் குழுவை சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் பல்தேவ் சிகங்கை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

இதையடுத்து, குருத்வாரா ஜெய்மல் சிங்கிற்கு புதிய  ”கிராந்தி”  ஆக லக்பீர் சிங் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு மல்கித் தனது தாய் ஜஸ்பிர் கவுர் மற்றும் இரண்டு சேவகர்களுடன் சேர்ந்து லக்பீரை கடத்தி கொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக நான்குபேரும் கைது செய்யப்பட்ட கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கோவிட் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி சிறைக்கைதியான மல்கித் பரோலில் வெளியே வந்தான். அப்போது மேலும் இரண்டு கொலைகளை செய்ய திட்டமிட்டான். குறிப்பாக, நிகாங் சீக் புத்தா தள் குழுவின் தலைவரால் தான் தனது குடும்பத்தினர் சிறை தண்டனை அனுபவித்து வருவதாக மல்கித் நம்பினான். எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டான். அதேபோன்று தனக்கு தெரிந்த ஜாதேபண்டியின் தலைவரையும் கொலை செய்ய திட்டமிட்ட வேளையில் தான் போலீசாரிடம் சிக்கிக்கொண்டான். இவ்வாறு  கூறினார்.

Related Stories: