அமமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அமமுகவுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணை தலைவர் தெகலான் பாகவி, மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் இருந்தனர். இந்த நிலையில் நேற்று டி.டி.வி.தினகரனுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அமமுக பொது  செயலாளர் டி.டி.வி.தினகரன், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு:அமமுகவுக்கும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவு கட்சிக்கும் இடையே இன்று(நேற்று) ஏற்பட்ட ஒப்பந்தப்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சிக்கு தமிழ்நாட்டில்ஆலந்தூர், ஆம்பூர், திருச்சி மேற்கு, திருவாரூர், மதுரை மத்தியம், பாளையங்கோட்டை ஆகிய ஆறு (6) சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: