பட்டுவாடாவுக்கு கூகுள் பே ஆள்தேடும் இலை கட்சிக்காரங்க

சட்டமன்றத் தேர்தல் பணப்பட்டுவாடாவுக்கு நவீன யுத்திகளை எல்லாம் யூஸ் பண்ணுவதில் இலைகட்சி காரங்க, படுகில்லாடியா இருக்காங்களாம். இதில் சி.எம். மாவட்டத்தில் உள்ள ஓமலூர் தொகுதியில் கூகுள்பே மூலம் பணம் பறக்குதாம். முக்கியமான அம்சம் என்னவென்றால் கட்சிக்காரங்களுக்கு இந்த பணம் போகலையாம். கட்சிக்கு விசுவாசமான, முக்கிய நபர்களுக்குத் தான் பணம் போகுதாம். ஒரு குறிப்பிட்ட பகுதியை எடுத்துக் கொண்டால் எத்தனை ஓட்டு இருக்கு? அதில் எத்தனை நமக்கு உறுதியாக விழும்? மொத்த குடும்பத்தினரும் பரிசுப்பொருட்களை எதிர்பார்க்கிறார்களா? அல்லது பணத்தை எதிர்பார்க்கிறார்களா? என்றெல்லாம் துல்லியமாக அறிந்து வைத்திருக்கும் வகையில் அந்த விசுவாசி இருக்க வேண்டுமாம். அவர் சமூக ஆர்வலர் என்ற போர்வையிலும் இருக்கலாம். மகளிர் குழுக்களின் நிர்வாகியாகவும் இருக்கலாம்.

அதேபோல் தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவராகவும் இருக்கலாம். ஆனால் அவரது செயல்பாடுகள் அனைத்தும், கடந்த காலங்களில் கட்சிக்கு சாதகமாக இருந்திருக்க வேண்டுமாம். அவரது வங்கி கணக்குக்கு கூகுள்ேபயில் பணம் சென்றுவிடுமாம். அவரு கனகச்சிதமாக வாக்காளர்களுக்கு  பட்டுவாடாவை முடித்து விட வேண்டுமாம். இந்த ஐடியாவின்படி, இலை கட்சிக்கு ஆதரவான சமூக ஆர்வலர்களை (?) பட்டியல் எடுத்து நிர்வாகிகள் பாக்கெட்டுல வச்சிருக்காங்களாம். இந்த ஐடியா நல்லா இருக்கே? மத்த தொகுதிகளுக்கும் இதை யூஸ் பண்ணலாமா? என்றும் முக்கிய நிர்வாகிங்க சிலர், ஆலோசிச்சுகிட்டு இருக்காங்களாம்.

Related Stories: