காற்று மாசுவால் மக்கள் அவதி: அத்தங்கி காவணூர் (கும்மிடிப்பூண்டி) ஏ.ஜி. கண்ணன் (விவசாயி)

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிபூண்டி சட்டமன்ற தொகுதியில் அரசு கலைக்கல்லூரி மற்றும் ஐடிஐ கல்லூரியும் இல்லை. மாணவர்கள் உயர்கல்வி பயில திருவள்ளூர் தொகுதிக்கு தான் செல்ல வேண்டும்.கும்மிடிபூண்டியில் இருந்து மாவட்ட தலைநகரான திருவள்ளூர் செல்ல கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்றும், புதுவாயல் கூட்டு சாலையில் சர்க்கரை ஆலை அமைக்க வேண்டும் என்ற நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், 5 ஆண்டுகள் அதிமுக வசம் இருந்தும் தற்போது வரை இதை கொண்டு வர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கும்மிடிபூண்டியில் தொழிற்சாலைகள் அதிகம்  உள்ளதால் காற்று மாசு அதிகளவு காணப்படுகிறது.  இதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் தொடர்ந்து ஆளும் அரசு அலட்சியம் காட்டி வருகிறது. இதனால், இந்த தொகுதிகளில் வசிக்கும் மக்கள் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் விட்ட அதிமுகவுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்ட முடிவு செய்துள்ளனர்.

Related Stories: