நிலவில் ஆய்வு மையம் சீனா-ரஷ்யா ஒப்பந்தம்: உலக நாடுகளும் பயன்படுத்தலாம்

பீஜிங்: விண்வெளி ஒத்துழைப்பின் புதிய அத்தியாயமாக, நிலவில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கும் கூட்டு திட்டத்தை சீனா, ரஷ்யா அறிவித்துள்ளன. சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், `நிலவின் மேற்பரப்பில், அதன் சுற்றுப்பாதையில் அல்லது இரண்டிலும் ஆய்வு மேற்கொள்வதற்காக, விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கும் ஒப்பந்தத்தில் சீனா, ரஷ்யா கையெழுத்திட்டு உள்ளன,’ என கூறப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சீன தேசிய விண்வெளி நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் ஜாங் கெஜியான், ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் தலைவர் டிமிட்ரி ரோகோஜின் தலைமையில் கையெழுத்தானது. இது தொடர்பாக இரு நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், `இந்த ஆய்வு மையத்தை உலகின் இதர நாடுகளும் பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கு சந்திரன் குறித்த அடிப்படை ஆராய்ச்சிகளும், அதன் பயன்பாடு குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும். இதன் திட்டமிடல், வடிவமைப்பு, மேம்பாடு, செயல்பாட்டில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: