மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது எப்படி? பதில் அளிக்காமல் தகவல் ஆணையம் தாமதம்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிட்டது. ஆனால், ‘அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது,’ என ஆளுநர் பன்வாரிலால் கைவிரித்தார். இந்நிலையில். ‘1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத், தண்டனை காலம் முடியும் முன்பாகவே எப்படி விடுதலை செய்யப்பட்டார்?

இதற்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டதா?’ என விளக்கம் கேட்டு, மும்பை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதில் அளிக்கும்படி மகாராஷ்டிரா தகவல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 20ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், பேரறிவாளன் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘பேரறிவாளன் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மகாராஷ்டிரா மாநில தகவல் ஆணையம் தற்போது வரை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை,’ என கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வழக்கை வரும் 16ம் தேதி விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related Stories: