வேட்பாளர் பட்டியல் வெளியீடு!: தர்மடம் தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்..!!

திருவனந்தபுரம்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீண்டும் தர்மடம் தொகுதியில் போட்டியிடுகிறார். கேரளாவில் ஏப்ரல் 6ம் தேதி ஒரு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து கட்சிகளும் தொகுதிபங்கீடு, கூட்டணி பேச்சு வார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மிகவும் பரபரப்பாக எதிர்நோக்கி இருக்கக்கூடிய கேரள சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக 83 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் தற்போது முதலமைச்சராக உள்ள பினராயி விஜயன், தொடர்ந்து வெற்றிபெறும் தொகுதியாக இருக்கக்கூடிய தர்மடம் தொகுதியில் மீண்டும் களம்காண்கிறார். அதேபோன்று கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய டாக்டர். கே.கே.சைலஜா, மீண்டும் மட்டன்னூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதேபோன்று ஆளுங்கட்சியில் உள்ள முக்கிய நபர்கள் மற்றும் தற்போதைய அமைச்சர்களுக்கு இந்த வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பிற கட்சிகளுடன் இணைந்து இந்த தேர்தலில் களம்காண்கிறது.

இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் கட்சி ஏற்கனவே கேரள சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தொடர்ச்சியாக முடிக்கிவிட்டிருக்கிறது. இன்றைய தினம் காங்கிரஸ் கட்சி சார்பிலும் கேரள சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் என்பது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அக்கட்சியும் இன்று அல்லது நாளைய தினம் டெல்லியில் தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் நடத்தி கேரள சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறது.

Related Stories: