சட்டமன்ற தேர்தலில் டிடிவி. தினகரன் 2 தொகுதிகளில் போட்டி: நாளை அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: அமமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு வினியோகம் கடந்த 3ம் தேதி தொடங்கி 7ம் தேதியுடன் முடிடைந்தது. மொத்தம் 5 நாட்கள் நடைபெற்ற இதில் 4,191 பேர் விருப்ப மனுக்களை  பூர்த்தி செய்து வழங்கினர். இந்தநிலையில், விருப்ப மனு வழங்கியவர்களுக்கான நேர்காணல் அமமுக தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று திருவள்ளூர், சென்னை, திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி,  கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி  உள்ளிட்ட தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் ஆட்சிமன்றக்குழு தலைவர் ஆர்.ஆர்.முருகன், உறுப்பினர்கள் சுகுமார், பாலசுப்ரமணி,  கோதண்டபாணி, டேவிட் அண்ணாதுரை, செங்கொடி, அப்துல் நபில் ஆகியோர் நேர்காணலை நடத்தினர்.

பின்னர், டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளேன். அமமுக தலைமையிலான கூட்டணிதான் முதல் அணி. அதுதான் வெற்றிக்கூட்டணியாக இருக்கும். ஓரிரு நாளில் கூட்டணி  குறித்த அறிவிப்பை வெளியிடுவேன். இன்றைய தினம் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, பெரம்பலூர், கரூர், திருச்சி, ராணிப்பேட்டை, வேலூர்,  திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட தொகுதிகளுக்கும் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கும் இன்று நேர்காணல் நடக்கிறது. நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அமமுக சார்பில் போட்டியிட உள்ள  வேட்பாளர் பட்டியலை டிடிவி.தினகரன் வெளியிட உள்ளார்.

Related Stories: