வாணியம்பாடியில் வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி-அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்

வாணியம்பாடி : வாணியம்பாடியில் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.   வாணியம்பாடியில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  18 வயது பூர்த்தியாகி உள்ள அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 1000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மராத்தான் போட்டியை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம், மற்றும் டிஎஸ்பி பழனிசெல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஆண்களுக்கு கல்லூரி மைதானத்தில் இருந்து 10 கிலோ மீட்டர்  தூரம் உள்ள செக்குமேடு வரையிலும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள வேப்பமர சாலை வரையிலும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 10 கிலோ மீட்டர் தூரத்தை 31.08 நிமிடத்தில் நெஞ்சுன்டான் என்பவர் முதல் இடமும், பெண்கள் பிரிவில் 5 கிலோ மீட்டர் தூரத்தை 25.40 நிமிடத்தில் பவித்ரா என்பவர் முதல் இடமும் பிடித்தனர்.

வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, பரிசுகள், ரொக்க பணம் மற்றும் நினைவு பரிசு கோப்பை வழங்கினார். மேலும், போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் சிலம்பாட்டம், ஜிம்நாஸ்டிக் உள்ளிட்ட சாகசங்களை நிகழ்த்திய சம்பவங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Related Stories: