அமமுகவில் 8, 9ம் தேதி நேர்காணல்: டிடிவி.தினகரன் அறிவிப்பு

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு விண்ணப்ப படிவம் அளித்தவர்களுக்கான நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் 8 மற்றும் 9 தேதிகளில் நடக்கிறது. அதன்படி, 8ம் தேதி காலை வடசென்னை கிழக்கு, மத்திய, மேற்கு, மத்தியசென்னை கிழக்கு, மத்திய, மேற்கு, தென்சென்னை வடக்கு, தெற்கு, கிழக்கு,திருவள்ளூர் கிழக்கு, மத்திய, ஈரோடு மாநகர் கிழக்கு, மேற்கு, புறநகர்,  திருப்பூர் மாநகர் வடக்கு,  தெற்கு,  புறநகர்,  கோவை கிழக்கு, மேற்கு, மத்திய, வடக்கு, தெற்கு, நீலகிரி தொகுதிகள்.

கிருஷ்ணகிரி கிழக்கு, மத்திய, மேற்கு,  தர்மபுரி கிழக்கு, மேற்கு, நாமக்கல்வடக்கு,தெற்கு, மேற்கு, கரூர் மேற்கு, அரியலூர்,தஞ்சாவூர் மாநகர், வடக்கு, தெற்கு, நாகப்பட்டினம் வடக்கு, தெற்கு, திருவாரூர், புதுக்கோட்டை வடக்கு, மத்திய, தெற்கு ஆகிய தொகுதிகள். பிற்பகல் 2 மணி சேலம் புறநகர் கிழக்கு, மேற்கு, மத்திய, வடக்கு, விழுப்புரம் வடக்கு, தெற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு, கடலூர் கிழக்கு, மத்தி, மேற்கு மற்றும் வடக்கு தொகுதிகள். 9ம் தேதி மதுரை வடக்கு, தெற்கு, புறநகர், தேனி வடக்கு, தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் கிழக்கு, மத்திய, மேற்கு,திருநெல்வேலி மாநகர், புறநகர்,    தென்காசி வடக்கு, தெற்கு, தூத்துக்குடி மாநகர், வடக்கு, தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு தொகுதிகள்.

மதியம் 3 மணி பெரம்பலூர், கரூர் கிழக்கு, திருச்சி மாநகர், வடக்கு, தெற்கு,    ராணிப்பேட்டை, வேலூர் மாநகர், புறநகர், திருப்பத்தூர், திருவண்ணாமலை வடக்கு, மத்திய, தெற்கு, தென்சென்னை கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, தெற்கு, செங்கல்பட்டு வடக்கு, தெற்கு, காஞ்சிபுரம்,புதுச்சேரி. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: