அடிப்படை வசதிகள் இல்லாத தொகுதி

பெருங்குடி கி.சிவமுருகன் (டிராவல்ஸ் உரிமையாளர்) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி பெருங்குடி ஆகும். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால் இத்தொகுதியில் அதிமுக அரசு அரசு கவனம் செலுத்தவில்லை. குறிப்பாக கடந்த 2011ம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலை, ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் அப்போதைய நிலைதான் உள்ளது. இப்பகுதிகளில் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால், அரசு மருத்துவமனை ஏதும் அமைக்கப்படவில்லை. இப்பகுதிகள் ஊராட்சியாக இருந்தபோது பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதால் தெரு குழாய்களில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வரும் நிலை உள்ளது.

இப்பகுதி ஊராட்சியாக இருந்தபோது என்ன நிலையில் இருந்ததோ அதே நிலைதான் இன்றும் நீடிக்கிறது.இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கவில்லை, மழைநீர் கால்வாய், பாதாள சாக்காடை  வசதியும் ஏற்படுத்தவில்லை. மேலும் மழை காலங்களில் பக்கிங்காம் கால்வாய் நிரம்பி மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனை தடுக்கும் வகையில் பக்கிங்காய் ஒட்டி மதில் சுவர் அமைக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள முதியவர்கள், ஊனமுற்றோர், திருமண உதவி தொகை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க இத்தொகுதி மக்களின் நலன் கருதி அடுத்து வரும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: