கம்பம் கேட்டு கம்பு சுத்தும் பாஜ

தேனி மாவட்டத்தில் போடி, பெரியகுளம், கம்பம், ஆண்டிபட்டி என 4 சட்டமன்ற தொகுதிகள் உளளன. கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவிடம் இருந்த ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதிகளை திமுக கைப்பற்றியது. போடி, கம்பம் தொகுதிகள் அதிமுக வசம் உள்ளது. போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கம்பம் தொகுதியில் எஸ்டிகே.ஜக்கையன் எம்எல்ஏவாக இருக்கின்றனர். ஏப். 6ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு கம்பத்தை குறி வைத்து  பாஜ கட்சியினர் காய் நகர்த்தி தொகுதியை தலைமையிடம் கேட்டும் வருகின்றனர். இதற்கிடையில் ஓபிஎஸ்சின் இளைய மகன் ஜெயபிரதீப்பை, கம்பம் தொகுதியில் நிறுத்திட, 100 பேர் வரை விருப்ப மனு செய்திருக்கின்றனர். பாஜ, அதிமுகவிடையே கம்பம் தொகுதியில் போட்டியிடுவதில் பெரும் போட்டி நிலவுகிறது. மேல்மட்ட கண்ணசைவின் படிதான் ஜெயபிரதீப்பிற்காக விருப்ப மனு செய்யப்பட்டிருக்கிறதாம். இதனால், அதிமுக தலைமை மகன் பக்கம் சாய்கிறதா? கூட்டணிக்காக விட்டு தரப்போகிறதா என்பதை அறிய தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக, பாஜ இரு கட்சியினருமே படு ஆர்வமாக காத்திருக்கிறார்களாம்.

Related Stories: