பழனிசாமி - எடப்பாடி; போடி - ஓபிஎஸ்;ஜெயக்குமார் - ராயபுரம்; சண்முகம் - விழுப்புரம்... அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

சென்னை : தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் பட்டியல் என தமிழக அரசியல் கட்சிகள் ஆயத்தம் ஆகி வருகின்றனர். இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை மாண்புமிகு முதல்வரும் கழக இணை ஒருங்கிணைப்பாளருமான  திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வரும் கழக ஒருங்கிணைப்பாளருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 4.6.2021 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கீழ்க் கண்டவர்கள் கீழ்காணும் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி – ஓ பன்னீர்செல்வம், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி – முதல்வர் பழனிசாமி, வடசென்னை கிழக்கு மாவட்டம் ராயபுரம் தொகுதி – அமைச்சர் ஜெயக்குமார்  விழுப்புரம் தொகுதி அமைச்சர் சி.வி சண்முகம், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி – எஸ்பி சண்முகநாதன், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தேன்மொழி போட்டியிடுகின்றனர் எனக்குறிப்பிட்டுள்ளது. அதிமுகவின் இந்த 6 வேட்பாளர்களும் ஏற்கனவே அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>