கர்நாடகாவில் பகல் 1 மணி நிலவரப்படி 38.23% வாக்குகள் பதிவாகியுள்ளன: தேர்தல் ஆணையம் தகவல்

கர்நாடகா: கர்நாடகாவில் பகல் 1 மணி நிலவரப்படி 38.23% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ம் கட்ட தேர்தலில் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். முதல் கட்டமாக தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பகல் 1 மணி நிலவரப்படி 38.23% வாக்குகள் பதிவாகியுள்ளது. உடுப்பி சிக்மகளூர் 46.43%, ஹாசன் 40.99% தட்சிண கன்னடம் 48.10% சித்ரதுர்கா 39.05%, தும்கூர் 41.91% ,மாண்டியா 40.70 மைசூரு 41.58 சாமராஜநகர் 39.57 பெங்களூர் கிராமம் 36.09, பெங்களூர் வடக்கு 32.25 மத்திய பெங்களூர் 30.10, பெங்களூர் தெற்கு 31.51 சிக்கபல்லாபூர் 39.85, கோலார் 38.42% வாக்குகள் பதிவாகியுள்ளது.

கர்நாடகாவில் பகல் 11 மணி நிலவரப்படி 22.34% வாக்குகள் பதிவாகியுள்ளன, உடுப்பி சிக்மகளூர் 29.03%, ஹாசன் 22.03% தட்சிண கன்னடம் 30.98% சித்ரதுர்கா 21.75%, தும்கூர் 23.32% , மாண்டியா 21.24% மைசூரு 25.09% சாமராஜநகர் 22.81% பெங்களூர் கிராமம் 20.35% பெங்களூர் வடக்கு 19.78% மத்திய பெங்களூர் 19.21%, பெங்களூர் தெற்கு 19.81 சிக்கபல்லாபூர் 21.92, கோலார் 20.76% வாக்குகள் பதிவானது.

கேரளா – 20 தொகுதிகள், கர்நாடகா 14 தொகுதிகள், ராஜஸ்தான் 13 தொகுதிகள், மத்தியப் பிரதேசம் 6 தொகுதிகள், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள், அசாம், பீகார் மாநிலத்தில் தலா 5 தொகுதிகள், சத்தீஸ்கர், மேற்கு வங்கத்தில் தலா 3 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணத்தால், அந்த தொகுதியில் மட்டும் மே7ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2மணி நேரத்திற்கு ஒரு தடவை எவ்வளவு வாக்குகள் பதிவானது என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

The post கர்நாடகாவில் பகல் 1 மணி நிலவரப்படி 38.23% வாக்குகள் பதிவாகியுள்ளன: தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: