துறையூர், முசிறியில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

துறையூர் : சட்டமன்ற தேர்தலையொட்டி துறையூரில் மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரின் சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் துறையூர் நகரப்பகுதிகளில் துணை ராணுவம், அதிவிரைவு படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த கொடி அணிவகுப்பை திருச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் துவக்கி வைத்தார், இந்த பேரணியானது பாலக்கரை பகுதியில் துவங்கி திருச்சி சாலை வழியாக பஸ் நிலையம் மற்றும் முசிறி பிரிவு சாலை வரை நடைபெற்றது. முசிறி டிஎஸ்பி., பிரமானந்தன், துறையூர் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் மற்றும் அதிவிரைவு படை, ஆயுதப்படை மற்றும் துறையூர், முசிறி, ஜம்புநாதபுரம் போலீசார் 250 பேர் கலந்துகொண்டனர்.

முசிறி: முசிறியில் கொடி அணிவகுப்பை ஏடிஎஸ்பி மணிகண்டன் கொடியசைத்து துவக்கி வைத்தார். முசிறி டிஎஸ்பி பிரம்மானந்தம், பயிற்சி டிஎஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அணிவகுப்பில் மத்திய துணை ராணுவப் படையினர் 66 பேர், போலீசார் 50 பேர், அதிவிரைவு படையினர் 50 பேர், ஆயுதப்படை போலீசார் 43 பேர், ஹோம் கார்டு 6, போக்குவரத்து போலீசார் உட்பட 250க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பில் பங்கேற்றனர். முசிறி கைகாட்டியில் துவங்கிய அணிவகுப்பு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தா.பேட்டை ரோடு ரவுண்டானா அருகே முடிவடைந்தது.

Related Stories: