ஆர்கே புரம் ஆக்கிரமிப்பை உடனே அகற்ற வேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள ஆர்கேபுரம் ஆக்கிரமிப்பை உடனே அகற்ற வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாம் உத்தரவிட்டுள்ளது.

தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்கே புரம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற கேட்டு அங்குள்ள குஷிசேவா சன்ஸ்தா அமைப்பு சார்பில்  கடிதம் எழுதப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அந்த அமைப்பு கடிதம்  எழுதியது. அதில்,’ ஆர்கே புரம் பகுதி 1ல் அங்கீகரிக்கப்பட்டாத வணிக நடவடிக்கைகள் அதிகரித்து உள்ளன. குறிப்பாக பழைய பொருட்கள் விற்பனை  கடை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்கேபுரம் பகுதியில் காற்று மாசு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே சுற்றுச்சூழல் தரத்தை சீர்குலைக்கும்  ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஏ.கே. கோயல்  முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தெற்கு டெல்லி மாநகராட்சி கமிஷனர், போலீஸ் துணை  கமிஷனர் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: