தொகுதியே ஒதுக்கல... பிரசாரம் துவங்கியாச்சு; காங்கிரஸ் சின்னத்தையே இன்னும் காட்டிட்டு இருக்கீங்களே.. தாமரையை கரை சேர்ப்பாரா குஷ்பு..?

அதிமுக கூட்டணியில தாமரை இருந்தாலும் தொகுதி பங்கீடு இன்னும் இழுபறியா தான் இருக்கு. எத்தனை தொகுதிகள் என்பதே இன்னும் முடிவாகல. 60ல் தொடங்கி கொஞ்சம், கொஞ்சமாக இறங்கி வந்தாலும், அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள எங்க கிட்ட கொடுத்துருங்க என்று மிரட்டாத குறையாக கேட்கிறாராம் ஷா. அவரு நடத்திய பேச்சுவார்த்தையில இலை தலைவருங்க ஒடுங்கி போயிட்டாங்களாம். நம்ம ஒரு ரூட்டு போட்டா... அவங்க பிரேக் போடுறாங்களே....என இரண்டு தலைவருங்களும் புலம்பாத ஆள் இல்லையாம். முக்கியமா நெல்லை, தூத்துக்குடி, தென்காசின்னு இலை கட்சி போட்டியிட்ட தொகுதிகள் தங்களுக்கு வேணும்ங்கிறாங்களே என்றார்களாம்.

இதில் நெல்லைல தாமரைல நீந்தப் போற நயினாரு, தொகுதி நமக்குத் தானுங்க என்ற தெம்பில் தேர்தல் அலுவலகம் வரை திறக்கப் போனாரு. கடைசி நேரத்தில் திறப்பு விழா நின்னு போச்சுன்னாலும் தற்போது தொகுதி தேர்தல் அலுவலகம் போல இயங்கத் தான் செய்யுது. இது போதாதுனு சமீபத்துல தாமரைல இணைந்த குஷ்புவையும் நேற்று நெல்லைக்கு அழைத்து வந்தாரு நயினாரு. அவரு கூட நெல்லை முழுவதும் வாகனத்தில் ஒரு ரவுண்டு வந்து கிட்டத்தட்ட பிரசாரத்தையே ஆரம்பிச்சுட்டாராம். இன்னும் தொகுதி யாருக்குனு தெரியல.....வேட்பாளர் தெரியல...அதுக்குள்ள பிச்சு உதர்றாரே நயினாருனு...இலை கட்சிக் காரங்க பிதுங்கிப் போய் நிக்கிறாங்களாம்.

Related Stories:

>