ஆலங்கட்டி மழையால் உதிர்ந்த திராட்சைகள்: ஒயின் தயாரிப்பில் பின்னடைவு

கோலார்: மாநிலத்தில் திராட்ைச அதிகம் பயிர் செய்யும் மாவட்டங்களில் கடந்த வாரம் ஆலங்கட்டி மழை பெய்ததால், செடிகளில் காய்த்திருந்த திராட்சைகள் உதிர்ந்துள்ளதால் ஒயின் தயாரிப்பில் பின்னடைவு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கோலார், சிக்கபள்ளாபுரா, ராம்நகரம், துமகூரு, பெங்களூரு ஊரகம், சாம்ராஜநகர், கொப்பள், மண்டியா, பல்லாரி, மைசூரு, பெலகாவி, பாகல்கோட்டை, பீதர், கலபுர்கி மாவட்டங்களில் விவசாயிகள் திராட்சை பயிர் செய்கிறார்கள். அதிலும் ஒயின் தயாரிக்கப்படும் நீல வண்ண திராட்சைகள் பெங்களூரு ஊரகம், கோலார், சிக்கபள்ளாபுரா மாவட்டங்களில் 3 ஆயிரத்து 500 ஏக்கரில் பயிர் செய்யப்படுகிறது.

ஓராண்டில் 13 ஆயிரத்து 384 டன் திராட்சை உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சாப்பிட பயன்படுத்தும் திராட்சை கிலோ 60க்கு விற்பனை செய்தால், ஒயின் தயாரிக்க பயன்படும் திராட்சை கிலோ 110க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2019-20ம் நிதியாண்டில் 260 கோடி வர்த்தகம் நடந்துள்ளது. நடப்பு நிதியாண்டு இறுதியில் கூடுதலாக 20 சதவீதம் வர்த்தகம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டு விஜயபுரா, பெலகாவி, பாகல்கோட்டை, பீதர், கலபுர்கி மாவட்டங்களில் 900 ஏக்கரிலும் மைசூரு மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் தலா 150 ஏக்கரிலும்  பெங்களூரு ஊரகம், கோலார், சிக்கபள்ளாபுரா, ராம்நகரம் மாவட்டங்களில் 750 ஏக்கரிலும் கொப்பள் மற்றும் பல்லாரி மாவட்டங்களில் தலா 200 ஏக்கர் நிலத்தில் வெள்ைள திராட்சை பயிர் செய்துள்ளதாக கர்நாடக மாநில திராட்சை மேம்பாட்டு கழக தலைவர் டி.சோமு தெரிவித்தார்.

கடந்த வாரம் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக செடியில் இருந்த திராட்சைகள் உதிர்ந்துள்ளதால் ஒயின் தயாரிப்பில் பின்னடைவு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். திராட்சை பயிர் ெசய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஓராண்டில் 13 ஆயிரத்து 384 டன் திராட்சை உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சாப்பிட பயன்படுத்தும் திராட்சை கிலோ 60க்கு விற்பனை செய்தால், ஒயின் தயாரிக்க பயன்படும் திராட்சை கிலோ 110க்கு விற்பனை செய்யப்படுகிறது

Related Stories:

>