தமிழகத்தை தகுதியற்றவர்கள் ஆட்சி செய்கிறார்கள்: கமல்ஹாசன் பேச்சு

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று இரவு மயிலை மாங்கொல்லையில் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: தகுதியற்றவர்கள் ஆட்சி செய்யும் இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களை அகற்ற வேண்டிய நேரம் இது. தமிழர்கள் மந்த புத்திக்காரர்கள் என்று நினைத்துக் கொண்டு புதிதாக பலர் எங்கிருந்தெல்லாமோ கிளம்பி வருகிறார்கள். தமிழ் கற்க முடியவில்லையே என்று வருந்துகிறார்கள். திருக்குறளை தப்பு தப்பாக சொல்கிறார்கள். இதற்கு மார்க் போடுவோமே தவிர ஓட்டுப் போட மாட்டோம். காஷ்மீர் தொப்பி வைத்துக் கொண்டால் காஷ்மீரியாகி விடுவதும், நாகலாந்து கொம்பு வைத்துக் கொண்டால் நாகாலாந்துகாரராகி விடுவதும் அந்தக் கால அரசியல்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கு தீவிர நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ஒரு போலீஸ் பெண் உயர் அதிகாரியே பாலியல் தொல்லைக்கு ஆளாகும் நிலையும், பாதிக்கப்பட்டவரை தடுக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. ஒருவர் நான் விவசாயி என்கிறார். விவசாயியாக இருப்பது ேவறு விவசாயி வேஷம் போடுவது வேறு, ஊருக்கு போக வேண்டிய ஆற்று தண்ணீரை தனக்கு திருப்பியவர் எப்படி விவசாயியாக இருக்க முடியும். தசாவதாரம் பட காலத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு என்னை 100 கோடிக்கு விலை பேசினார்கள். நான் விலை போகவில்லை. எனக்கு 100 கோடி போதாது. 5.7 லட்சம் கோடி வேண்டும். அரசு கஜானாவை நிரப்ப. நல்லவர்கள் எங்களை நோக்கி வருகிறார்கள். இனி நான் அடிக்கிற ஒவ்வொரு அடியும் சிக்சர்தான்.

Related Stories: