வேட்பாளர் பெயர்களை பேஸ்புக்கில் பதிவிட்ட இலை கூட்டணி கட்சிகள்

தர்மபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகள் இருக்கு. இந்த தொகுதிகள் அனைத்திலும் ஆளுங்கட்சி வேட்பாளர்களை நிறுத்த ஆயத்தமாகிகிட்டு இருக்கு. ஆனாலும் கூட்டணியில் இருக்கும் தாமரை, மாம்பழம் கட்சிகள் அந்த தொகுதிகளை கேட்டு முண்டியடிக்குது. இதில் பென்னாகரம் தொகுதிக்கு இலையின் கூட்டணியில் உள்ள மாம்பழமும், தாமரையும் பேஸ்புக்கில் வேட்பாளர்களை அறிவித்திருப்பது புயலை கிளப்பி இருக்கு. மாம்பழத்திற்கு ஏற்கவே தொகுதிகளின் எண்ணிக்கையை கொடுத்தாச்சு. ஆனால் பென்னாகரத்தில் அந்த கட்சியின் மாநில துணை பொது செயலாளர் வெங்கடேஸ்வரன் போட்டியிடுவதாக கட்சியினர் பேஸ்புக்கில் பதிவு போட்டிருக்காங்க.

அதே போல் பாஜ சார்பில் வீரப்பன் மகள் வித்யாராணி போட்டியிடுவதாக அந்த கட்சி நிர்வாகிகள் கிளப்பி விட்டிருக்காங்க. உங்களுக்கு நாங்க என்ன இளைத்தவர்களா? என்ற ரீதியில் அதிமுக சார்பில் மாவட்ட பால்வளத் தலைவர் டி.ஆர்.அன்பழகன் போட்டியிடுவார் என்று இலைகட்சிக்காரங்களும் பதிவு போட்டிருக்காங்க. இது கூட்டணியில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்காம். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் பாமகவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி இந்த தொகுதியில்தான் போட்டியிட்டாரு. ஆனால் திமுகவின் இன்பசேகரன் தான் ஜெயிச்சாரு என்பதை இலை கூட்டணி மறக்கக் கூடாது என்கிறது பப்ளிக்.

* கட்சியினரை பிடித்து ஆட்டும் சென்டிமென்ட் திருப்போரூரில் கடந்த 36 ஆண்டுகளில் இரு முறை வென்றவர் யாருமில்லை: தேர்தல் நடந்த ஆண்டும் வென்றவர்களின் விவரமும்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் திருப்போரூர் பழமையான தொகுதிகளுள் ஒன்று. கடந்த 1984ம் ஆண்டு தேர்தல் முதற்கொண்டு அண்மையில் 2019ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தல் வரை திருப்போரூர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் யாருமில்லை. இதனால், இந்த சென்டிமென்ட் அனைத்துக் கட்சியினரையும் கதிகலங்க வைத்துள்ளது. அதிமுக., பாமக, உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் இந்த அதிர்ச்சி சென்டிமெண்டால் வேறு தொகுதிக்கு போகலாமா என்று கணக்குப் போட்டு வருகின்றனர். ஆனால், அதே நேரத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த சொக்கலிங்கம் 1977 மற்றும் 1980 ஆகிய இரு முறையும், தொடர்ந்து 1996ம் ஆண்டும் ஜெயித்து சாதனை படைத்துள்ளார்.

Related Stories: