உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் : புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி ....!

சென்னை : சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் தமிழிசை சவுந்தரராஜன் துணை நிலை ஆளுநராக பதவியேற்றயுடன் ஆட்சியை கவிழ்ப்பு வேலை வேகமாக நடந்தது.பலகோடி ரூபாய் வைத்து கொண்ட அமித்ஷா தலைமையில் புதுச்சேரி ஆட்சியை கலைத்தனர்.புதுச்சேரியில் எங்களுக்கு பெரும்பாண்மை இருந்தது.ஆனால், சபாநாயகரை  அமித்ஷா நேரடியாக மிரட்டியுள்ளார்.அதனால், மூன்று நியமன எம்எல்ஏ களுக்கு வாக்களிக்க அதிகாரம் அளித்தார்.இதேபோல், பலர் மிரட்டிப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டு சதி செய்தனர்.

தேர்தல் வருகிறது என்பதால்,பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி தற்போது அடிக்கல் நாட்டுகிறார்.இது ஒரு ஏமாற்று வேலை.தேர்தல் நேரத்தில் மக்களை திசைதிருப்ப இப்படி திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்.அருணாச்சல பிரதேசம், மணிப்பூர்,கோவா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பல ஆயிரம் கோடியை பாஜக செலவு செய்தது.புதுச்சேரி மாநிலத்தில் ராகுல் காந்தி வந்தபோது, நான் தவறாக மொழிபெயர்ப்பு செய்ததாக ஆர்.எஸ்.எஸ்,பாஜக தவறாக மக்கள் மத்தியில் பரப்பினார்கள்.

.உள்துறை அமைச்சர் அமிஷ்தா, நான் மத்திய அரசு வழங்கிய 15 கோடி பணத்தை எடுத்து விட்டு,காந்தி குடும்பத்திற்கு கொடுத்ததாக பொய் குற்றச்சாட்டை வைக்கிறார்.உள்துறை அமைச்சர் அமிஷ்தா என் மீது உள்ள குற்றச்சாட்டை நிரூப்பிக்க தயாரா ? என்று நான் சவால் விடுகிறேன். என் மீது குற்றச்சாட்டை

பகீரங்கமாக விசாரணை நடத்த வேண்டும் என்று நானே சொல்கிறேன்.உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது அவதூறு வழக்கு தொடுக்க உள்ளேன்.நோட்டீஸ் அனுப்ப உள்ளேன்.என் மீது உள்ள குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்றால்,உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும்.திமுக தலைவர் ஸ்டாலின் அவரது பிறந்தநாளையொட்டி இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் ஆட்சி அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: