மேலிட உத்தரவு வந்ததால் பாஜ சின்னம் வரைந்தோம்: நடிகை கவுதமி ‘‘கூல்’’ பேட்டி

மேலிட உத்தரவின் பேரில்தான் ராஜபாளையம் தொகுதி முழுவதும் பாஜ சின்னம் வரைந்துள்ளோம் என நடிகை கவுதமி கூறினார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய நடிகை கவுதமி நேற்று வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ராஜபாளையத்தில் பாஜ தொகுதி பொறுப்பாளராக பணியாற்றி  வருகிறேன். தற்போது வரை வேட்பாளர் யார் என்று முடிவு செய்யவில்லை. கட்சி மேலிட அறிவுறுத்தல் காரணமாகத் தான், ராஜபாளையம் தொகுதி முழுவதும் பாஜ சின்னம் வரைந்துள்ளோம். தேர்தல் அலுவலகமும் ஆரம்பித்துள்ளோம்’’ என்று கூறினார். அதிமுக, பாஜ கூட்டணி பேச்சு நடைபெற்று வருகிறது. கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி என்று இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் ராஜபாளையம் தொகுதி முழுவதும் தன்னிச்சையாக பாஜ சின்னம் வரைந்து, தேர்தல் அலுவலகம் திறந்திருப்பது அதிமுகவினருக்கும், கூட்டணி கட்சியினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* தேசிய கட்சிகளை வீழ்த்தி வெற்றி வாகை

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி சட்டமன்ற தொகுதி வித்தியாசமான தொகுதியாகும். நான்கில் 3 பகுதி காடு, மலைகள் கொண்ட கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள தொகுதியாகும். கன்னடம், தெலுங்கு அதிகமாக பேசும் 800க்கும் மேற்பட்ட கிராமங்கள், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் இரண்டு பேரூராட்சிகள், 68 ஊராட்சிகளை கொண்டுள்ளது. 1977ம் ஆண்டு உதயமான இந்த தொகுதி, இதுவரை 10 சட்டப்பேரவை தேர்தல்களை சந்தித்துள்ளது. இதுவரை நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் தேசிய கட்சிகளே வென்றுள்ளன.

1977ல் இருந்து காங்கிரஸ் கட்சி 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும், ஜனதா தளம், பாஜ மற்றும் சுயேச்சை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. தேசிய கட்சிகளே வெற்றி பெற்று வந்த நிலையில், 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், திமுக வேட்பாளர் ஒய்.பிரகாஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரனை விட 6,245 வாக்குகள் அதிகம் பெற்று, வெற்றி பெற்று முதல் முறையாக மாநில கட்சியான உதயசூரியனை உதிக்க வைத்தார். இந்த தேர்தலிலும் தளி தொகுதியில் உதயசூரியன் தான் உதிக்கும். தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக அமர்த்துவோம் என அக்கட்சியினர் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

Related Stories:

>