திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும்: காதர் மொய்தீன்

சென்னை: திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும் என்று இ.யூ.மு.லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். தொகுதிகளின் எண்ணிக்கை பற்றி மட்டுமே இன்று பேசினோம். கடந்த தேர்தலில் எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. நாளை மாலை மீண்டும் சந்தித்து திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த முடிவை அறிவிப்போம்.

Related Stories:

>