பல்லாவரம் தொகுதிக்கு பாரபட்சம் காட்டிய அரசு

ரதிதேவி சதிஷ் (இல்லத்தரசி) பழைய பல்லாவரம்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகள் பெற்று திமுக பல்லாவரம் தொகுதியை கைப்பற்றியதால், ஆத்திரமடைந்த ஆளும் அதிமுக அரசு, பல்லாவரம் தொகுதிக்கு மட்டும் நிதி வழங்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டி  வருகிறது. இதன் காரணமாக மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கூட எம்எல்ஏ நிதியில் இருந்து செய்ய முடியவில்லை. பல்லாவரத்தில் இருந்து குன்றத்தூர் செல்லும் பிரதான சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று கடந்த  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திமுக சார்பில் சட்டசபையில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அப்போது, உடனடியாக திமுகவின் கோரிக்கையை ஏற்று, சாலையை அகலப்படுத்த அரசு போதுமான நிதியை ஒதுக்கும் என்று முதல்வர்  கூறியதோடு சரி. தற்போது வரை அந்த சாலையை அகலப்படுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பல்லாவரம்- குன்றத்தூர் சாலையில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அனைத்தும்  ஊர்ந்து செல்லும் நிலையே உள்ளது.

Related Stories:

>